பேருந்து பயணம் சுகமாய்

அந்தி மாலை பொழுதில்
ஜன்னலோர இருக்கையில் நான்
ஈரம் கலந்த மெலிதான காற்று
தாய் தலைகோதும் உணர்வு

என்னோடு ஓடி பிடித்து
தாலாட்டி சென்றது ....
தூக்கம் கண்கள் வருட
இருந்தும் பேருந்தில் மக்களின்
சப்தம் சங்கீதமாய் ...

கொஞ்சம் தள்ளி நில்லப்பா
போலாம் ரெய் போலாம் ரெய்
என எல்லா குரலும் ஒன்றாய்
கிணற்றில் இருந்து கேட்பதுபோல்
எங்கோ கேட்கிறது அருகில் ....

பிரிய மனமில்லை
மறக்க வழியில்லை
இந்த காதலும்
பேருந்து பயணம்போல் ...

எழுதியவர் : ருத்ரன் (17-Jan-17, 8:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 147

மேலே