வெளிநாட்டின் துன்பம் துன்பம்

வெளிநாட்டின் இன்பம் துன்பம்
இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம்
முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும்
வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும்

இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை
அது தான் எங்களின் அறை
அது உள்ளவே சமையல் அறை

சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும்
குளிர்சாதன கிடங்குல
அந்த ஏதிலிலும் சத்துயில்ல

நாங்கள் உண்ணுவது தான் உணவு
நாக்கு சுவைக்கு இல்லை என பழகு
இது தான் எங்கள் முதல் மந்திரம்

இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு
அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும்
இதை யாருக்குத்தான் பிடிக்கும்
சுவாசிக்க காற்று தேவை இங்கு
சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை

அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை
கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும்
காய்ச்சலில் பார்த்துக்கொள்ள ஆளும் இல்லை
உடல் மீது கவனம் குறைந்தால் உயிருமேயில்லை

கோடைகாலத்தில் உடலும் இரத்தமும் பனித்துளியை மாறி கரையும்
பனிக்காலத்தில் இரத்தமும் உடலும் உறைந்து போகும்
குடும்ப சூழ்நிலையால் தினம் தினம் கடுமையான
குளிருளிலும் வெளியிலிலும் உழைக்கிறோம்
இந்த நிலைமை எப்பொழுதுதான் மாறுமே

மேலதிகாரியாய் இருப்பதும் நம்ம நாட்டு ஆளடா ...
அவன் யாருனு காட்டிக்க மட்டான்
திட்டு திட்டுனு திட்டுவான்
OT செய்து வரும் பணமும் தர மட்டான்

வரம் ஒருநாள் விடுமுறை அன்று வீட்டுக்கு பேச்சி
பணமும் இல்லை என்றால் அதுவும் இல்லாமல் பேச்சி

மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் சம்பளம்
அதுவும் இங்க இருக்கிற கடைக்காரருக்கு தான் கொடுக்கணும்
வீடு செல்ல வேண்டும் என நினைக்கும் மனம்
அப்போது வீடுநிலைமையை நினைத்து மாறிடும்

இங்கு உள்ளவருக்கு ஒவ்வெருக்கும் ஒரு மனநிலை
ஆனால் ஒன்றே ஒன்று குடும்ப சூழ்நிலை

கடல் அலையும் பின்னால் போகும் சீறிக்கெண்டு முன்னால் வந்துவிடும்
எங்கள் கவலையும் நிலைமையும் போகுவது போல் போகும்
மீண்டும் அலையை வந்துவிடும்

கடல் தாண்டியும் திரவியம் தேடு என சொன்னான் முன்னேர்
கடலை தாண்டியும் கரையை தேட்டுவிடலாம் ஆனால்
கடல் தாண்டி வேலைக்கு வந்தால் திரவம் ஆவியாய் மறுத்தே ...

இங்க இருக்க இருக்க போயிடும் இளம
வீட்டின் நிலைமையிலும் மாறாது புதும
இதை நினைச்ச மனசுல வெறும

வெளிநாட்டில இவ்வாறும் வாழ்வும் இருக்கு சிலபேருக்கு ...

சரியாக படிக்காம கொள்ளாமல்
வெளிநாட்டின் மேல் கொள்ளாத மோகம்
இரண்டுபட்டமாவது பெற்று விடு
வெளிநாட்டில் நீயும் பட்டம் விடலாம்
பட்டம் பெறாமல் வந்தால் அதற்கு நீ செத்துவிடலாம்
இங்க அனைவருக்கும் ஒரே சட்டம் நாம் நாட்டிலேயில்லை இந்த கட்டம்

வெளிநாட்டில் இல்லை கெட்ட நாடு அனைத்து நாடும் நல்லநாடு
நீ பட்டம் பெற்று வந்தால் இங்கு உறவுஆடு
பட்டம் பெறாமல் வந்தால் உன்பாடு அனாதைப்பாடு

தெரிந்துகொள் புரிந்துகொள் ஒருவன் அனுபவத்தை கூறுவதையும்
கேட்டுக்கொள் அறிந்துகொள்
வெளிநாட்டின் மேல் கொள்ளாதே மோகம் ......

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (18-Jan-17, 7:51 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 147

மேலே