மூளையற்ற செயல்

புகைப்பிடித்தல் கேடாம். பொதுவாகச் சொல்லி
வகைவகையாய் ஊரெங்கும் விற்றுத் – தொகைதொகையாய்ச்
சேர்க்கும் அரசாங்கம் சல்லிகட்டுக் கிட்டதடை
ஊர்திரள செய்திட்ட ஊறு.
பாதிப்பை ஏற்படுத்தும் பாங்கில் மதுக்கடை
வீதிக்கு வீதித் திறந்தெங்கும் - நீதிக்கு
மாறாய் நடத்துவோர் மாடடக்கும் வீரத்தை
தாறுமா றென்னல் தவறு.
இறைச்சிக் கறுக்கும் அனுமதியை மட்டும்
நிறைவாய் வழங்கிவிட்டு நின்றே – மறைமுகமாய்
காளை அடக்குதலில் காருண்யம் பார்ப்பது
மூளையற்ற தென்றே முழங்கு.
*மெய்யன் நடராஜ்