ஏறு தழுவல்
பொங்கி எழுந்தது படை-அதற்கு
போடுவரோ இங்கு தடை!
எங்கும் வெடித்தது புரட்சி –அதில்
அனைவரும் கொண்டனர் மிரட்சி !
ஏறு தழுவம் விளையாட்டு –அதில்
ஏது கொடுமை நீ காட்டு !
ஏனோ இதற்குத் தடை- அதை
உடைக்க எழுந்தது பெரும்படை !
ஏனிங்கு முளைத்தது பீட்டா –அதற்கு
நாமின்று சொல்வோம் டாட்டா !
பண்பாட்டை அழிக்கும் பரதேசி-நம்
பாரத நாட்டுக்கும் விதேசி !
உலக மெங்கும் போராட்டம் –அதில்
உணர்வுகள் ஓடுவது நீராட்டாம்
வெல்லுமோ வஞ்சகர் பேயாட்டம்-அது
வீழ்ந்து போயிடும் தரைமட்டம்.
தடையினை உடைத்து வென்றிடு –உன்
தோள்வலி தன்னைக் காட்டிடு
மடைவழி வெள்ளமாய் பொங்கிடு-பிறர்
மடமை எண்ணம் புதைத்திடு !
காளையும் உனக்குத் தோழனே- எனும்
கருணைக் குணத்தைக் கொண்டிடு
கோழை நீஇல்லை என்பதை –ஓடும்
காளையைப் பிடித்துக் காட்டிடு.

