வேதனைப் பட்டு வேகாதே
எங்கும் எதற்கும் அஞ்சாதே –உன்
உணர்வை மறைத்துக் கெஞ்சாதே ?
பொங்கும் கடலுக்கும் தயங்காதே –குடி
போதையில் கிடந்து மயங்காதே ?
ஆற்றலை அடக்கி வைக்காதே –உன்
அறிவின் ஒளியை மறைக்காதே ?
கூற்றுவன் வந்தால் கலங்காதே –உன்
கொள்கை எதையும் விலக்காதே ?
அன்புடன் வாழணும் மறக்காதே –கொடும்
அழிவிக்கு மனதைத் திறக்காதே ?
உண்மை சொல்ல தயங்காதே –அது
உயர்வைத் தந்திடும் ஒதுங்காதே ?
மதத்தினில் வேற்றுமை பார்க்காதே –அது
மடமை என்பதை மறக்காதே ?
அதர்மம் பண்ணிட அலையாதே –அந்த
அனலில் விழுந்து எரியாதே ?
பணத்துக்கு என்றும் மயங்காதே –அது
பண்ணிடும் பாவத்தில் வீழாதே ?
குணத்தைத் தொலைத்திட எண்ணாதே –தீ
கோபத்தில் உன்னை இழக்காதே ?
நரிகள் போன்று ஏமாற்றும் –நய
வஞ்சகச் செயலைச் செய்யாதே ?
பரிவுடன் நடந்திட மறக்காதே –நல்
பண்பினை உன்னில் தொலைக்காதே ?
தீண்டாமை எண்ணம் கொள்ளாதே –அது
தீங்கில்லை என்பதைத் தள்ளாதே ?
வேண்டா செயல்கள் செய்யாதே – பின்
வேதனை பட்டு வேகாதே ?