மகிழ்ச்சி

பாடாண் திணையன்றோ
பாக்களில் சொற்கலென்று
தேடா மட நெஞ்சம்
தெரிவது கனவிலன்றோ
கூடா மனத்துன்பம்
குறைவின்றி இன்பங்களால்
ஆடாதிருக்கும் காலில்
அடிபணியும் சரணங்களே
பேறாய் கிடக்கும்போது
பேரின்பம் இதுவன்றோ


துறப்பது வாழ்வுக்கன்று
தூயது நடக்குமென்று
சிறப்பதே காரியங்கள்
சேவையில் கிடைக்கும்போது
உலகமெல்லாம் வளங்களாகி
ஒவ்வொன்றும் படைப்புக்காகி
ஒப்பிலா பரிணாமத்தில்
ஒன்றிதான் தழைக்கையில்
ஆசைகள் நிகழவதுதானே
ஆருயிர் பிறப்புகளே



எழுதியவர் : . ' . கவி (9-Jul-11, 9:24 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 416

மேலே