வீரவிளையாட்டு

ஜல்லிக்கட்டு இது காளையுடன்
மல்லுக்கட்டு அல்ல
வீரதமிழர்களின் வீர விளையாட்டு
ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை..
இதை பறிக்க யாருக்கும்
இல்லை உரிமை...

காளைகளை பிள்ளை போல் வளர்ப்பது எங்களின் ஆக்கம்
அதற்கு தொல்லை கொடுப்பது
அல்ல எங்களின் நோக்கம்...

அத்தக்கருப்பன்
கட்டுக்கொம்பன்
கருமறைக்காளை
செவலகாளை கொண்டைத்தலையன் மயிலைக்காளை
போன்று 92 வகை மாடுகளை வளர்த்து ஆண்டவன் தமிழன்...

காளைகளின் கம்பீரத்தை
அடக்கி காட்டுவது எங்களின் வீரவிளையாட்டு...
இது தலைமுறை தலைமுறையாய்
கடைப்பிடிக்கும் தழிழனின் சாகசவிளையாட்டு...

அடக்க நினைக்காதே
இது அடங்காத காளைகூட்டம்
ஒடுக்க நினைக்காதே
இது ஒடுங்காத புலிகள் கூட்டம்..

எழுதியவர் : செல்வமுத்து.M (20-Jan-17, 8:38 pm)
பார்வை : 103

மேலே