ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
;
;
;
எகிறி வரும் காளை
திமிறி காட்டும் தோளை
தொட்டு பார்க்க நீயும் போன
தூக்கி அடிக்கும் ஆள...
தமிழனோட வீரம்
எதிர்த்ததில்லை யாரும்
வரலாறு பேசும்
தமிழே எங்கள் சுவாசம்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க
சேர்ந்த இளைஞர் கூட்டம்
தொட்டு பார்க்க நினைச்சா
ஆட்சி காணும் ஆட்டம்
நினைத்ததை நாங்க முடிப்போம்
அதுக்கு இமயம் கூட கடப்போம்
பசுவைபோல இருப்போம்
யாரையும் பார்வையாலே அளப்போம்
நடத்துவோம் நாங்க ஜல்லிக்கட்டு
பீட்டாவை மொத்தமாய் ஓரங்கட்டு
ஆழம் தெரியாம கால விட்டு
போய்டுவே நீயும் மானங்கெட்டு
ஒற்றுமைதானே எங்கள் சொத்து
தமிழன் என்று சொல்லு அந்த
புகழால் தலைநிமிர்ந்து நில்லு