குத்துக்கல்லின் ஏக்கம்

புத்தனாய் பிறந்திருந்தால்,
போதி மரத்தடியில் அமர்த்து வாழ்வை முடித்திருப்பேனே...

வள்ளலாராகப் பிறந்திருந்தால், பக்தி மார்க்கமும், சமுதாய சமத்துவ மார்க்கத்திலும் வாழ்ந்து அருட்பெருஞ் சோதியோடு சுடராய் கலந்திருப்பேனே...

சுவாமி விவேகானந்தராகப் பிறந்திருந்தால்,
மக்களின் மீது கொண்ட அன்பால் செய்யும் தொண்டே,
இறைவனுக்கு செய்யும் பக்திமிகு பணிவிடையாய் வாழ்ந்து இறந்திருப்பேனே...

மகாத்மா காந்தியாகப் பிறந்திருந்தால், அகிம்சையாக அகிலம் போற்ற வாழ்ந்து மறைத்திருப்பேனே...

குறைந்த பட்சம் ஒரு மரமாகப் பிறந்திருந்தால்,
மற்றவருக்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாய் வாழ்ந்து மறைந்திருப்பேனே...

இப்படி பயனுள்ள பல பிறப்புகளிருக்க, எனைக்
குத்துக்கல்லாய் படைத்து யாருமில்லாத இக்காட்டில் அழியா வாழ்வை தந்தாயே இயற்கையன்னையே...
இது வரமா??
அல்லது
சாபமா???

நாளும் அதை எண்ணியே பொடிப்பொடியாய் உடைந்து சிறு துகள்களாக மாறி, நான்
மண்ணாகிறேனே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Jan-17, 11:40 pm)
பார்வை : 283

மேலே