சல்லிக்கட்டு காளை நாங்க

பீட்டா என்றால் நோட்டா கொடுக்கறான் !
ஆளும் அரசும் கூட ஆமாம் போடுறான் !
தமிழ் பண்பாட்டுக்கே பாடைகட்டறான் !
தடயம் அழிக்க தடையம் தேடறான் !

சீண்டிப் பாக்க நாங்க -
செல்லாக்காசும் இல்ல ;
சினம்கொண்ட காளையைப்போல் -
சிகரம்வரை பாய்வோம் ! ( பீட்டா என்றால்...

எட்டு திக்கு எங்கும் -
எங்க தமிழின் ஓசை முழங்கும் !
ஏறு பிடிப்போம் நாங்க -
எதிர்க்க நீங்க ஏங்க? ( பீட்டா என்றால்...

மோதி பார்க்காதே ! தமிழனை -
மோதி பார்க்காதே !
சல்லிக்கட்டு காளை நாங்க -
சத்தமின்றி போங்க ! ( பீட்டா என்றால்...

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (21-Jan-17, 11:41 am)
பார்வை : 125

மேலே