கடலோரக் கவிதை

கடலோரம் காத்திருக்கக்
----- கண்மணியே வந்திடுவாய் !
விடலைபோலே என்னிதயம்
------ விலகாது உனைவிட்டு .
மடல்களுமே வனைந்திடுவேன்
------- மாலைநேர மயக்கத்திலே
உடல்மேலே காதலில்லை .
------- உள்ளத்தால் காதலித்தேன் .
கடலலையாய்க் கனவுதனில்
------- கடலோரக் கவிதைநானே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jan-17, 11:21 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 106

மேலே