ஏறு தழுவுதல் - கிராமியக்கவி
வாடிவாசல் திறந்திடுவாங்க கண்ணம்மா !
வாலிபன் வீரத்தைப் பாரடி கண்ணம்மா !
வாட்டத்திற்கு வேலையில்லை கண்ணம்மா !
வருவேன்டி ஏறுதழுவ கண்ணம்மா !
சீறிப்பாயும் காளையோடு கண்ணம்மா !
சிலிர்க்குமடி சல்லிக்கட்டும் கண்ணம்மா !
சிறப்பான ஆட்டமடி கண்ணம்மா !
சித்திரமே ! பார்க்கவாடி கண்ணம்மா !
அரசாங்கம் மாறிடுமா கண்ணம்மா !
அலங்காநல்லூர் போவோமடி கண்ணம்மா !
அமைதியானப் போராட்டம் கண்ணம்மா !
அடித்தாலும் ஓய்ந்திடுமா கண்ணம்மா !
காளையர்கள் ஒன்றுகூடிக் கண்ணம்மா !
காளைதனை அடக்குதலும் கண்ணம்மா !
கன்னியுனை மணமுடிக்கக் கண்ணம்மா !
காலஞ்சொல்லும் விளையாட்டுக் கண்ணம்மா !
போராட்டம் வெற்றிப்பெறுமே கண்ணம்மா !
ஏரோட்டப் போவோமடி கண்ணம்மா !
பாராளும் எழுச்சிவெள்ளம் கண்ணம்மா !
ஊராளும் உலகாளும் கண்ணம்மா !!!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்