தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 11--முஹம்மத் ஸர்பான்
101.வயது முதிர்ந்த மலைக் குன்றில்
நாளாந்தம் ஆயிரம் வேர்களின் பிரசவம்
102.கடலின் அலைகள் தர்மம் செய்தும்
கரையின் தாகம் அவைகள் அறிவதில்லை
103.நீச்சல் உடையில் நடிகை மிதப்பதால்
உல்லாசப் பறவைகளும் கற்பை இழக்கிறது
104.ஏழையின் கண்கள் விலை போகிறது
இரும்மலோடு வந்தவன் இருட்டறை செல்கிறான்
105.மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
பார்த்து பாழடைந்த வீட்டுச் சுவர்கள் சாபமிடுகின்றன
106.கற்புள்ள பூக்களை முத்தமிட்ட வாடைக்காற்று
விதியின் வசத்தால் கற்பையிழந்த விலைமாதுவின்
மரணத்தை விரைவாக்கி மன்னிப்பு கேட்கிறது
107.ஏழை கண்ட கனவுகள் எல்லாம்
குருடனின் தோட்டத்தில் விதையாகிறது
108.சுவாசிக்கும் வரை எழுதப்படும் நாட்குறிப்புக்கள்
மரணத்தின் பின் அவனுக்குள் விசாரிக்கப்படுகிறது
109,ஒத்த தண்டில் முளைத்த பூவும் முள்ளும்
ஒருதலைக் காதலோடு கசங்கிப் போகின்றது
110.புல்லாங்குழல் ஒன்று கதவை தட்டுகிறது
ஊமையறிந்த எட்டாம் சுரத்தை அறிவதற்காய்..,