ஜல்லிக்கட்டு -1

துள்ளிக் குதித்தோடும் காளை யுடனாடும்
சல்லிக்கட் டென்ற மரபு விளையாட்டை
கிள்ளிய கீரையென தள்ளித் தடைசெய்த
கள்ளத்தைப் போட்டே உடை. 1.

சல்லிக்கட் டைக்காக்க வேற்றுமைகள் பாராமல்
வெள்ளப் பெருக்கென விரைந்தோடி வந்திங்கே
எள்விழவும் இடமின்றி கடற்கரையை நிறைத்திட்ட
நல்லுள்ளத் தமிழர்க்கு நன்றி. 2.

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம்) (23-Jan-17, 6:20 pm)
பார்வை : 71

மேலே