ஜல்லிக்கட்டு

தமிழ் பேசும்
தமிழனே!
நீ அடக்குவது
ஜல்லிக்கட்டு...
தமிழன் ஒருவனால்
மட்டுமே முடியும்
காளையை அடக்க...

அச்சம் கொல்ல என்ன
இருக்கு...
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு...

அவனே வீரன்
முதலில் அடக்கு
ஜல்லிக்கட்டு...
பிறகு மணவறையில்
அமர்ந்து தாலிக்கட்டு...

மண்ணில் பிறப்பது
சாதிக்க...
மூலையில் கோழை போல
முடங்க இல்லை...

திமிர் பிடித்த
காளையை கூட
அடக்கி விடலாம்...
ஆணவம் கொண்ட
மனித மிருகங்களை
திருத்த முடியுமா...

முடியும் என்றால்
விடுவோம் ஜல்லிக்கட்டு...
இல்லையேல் தொடர்வோம்
ஜல்லிக்கட்டு...
தமிழன் என்ற அங்கீகாரம்
இது ஒன்றே...

தடை செய்து தமிழனை
வாங்காதே பழி...

எழுதியவர் : பவநி (24-Jan-17, 1:41 pm)
பார்வை : 215

மேலே