சிந்தித்தே செயல் படுங்கள்

எதுவாயினும் கொஞ்சம் சிந்தித்தே செயல் படுங்கள்.....
--------------------

நீண்ட நேரமாய் இடம் மாறாமலே சிந்திக்கொண்டிருந்த அந்த ஒரு சொட்டு மழை நீரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் தினேஷ்.

ஈழத்து வாசனையை மண் மீது மழை வீழ்ந்து நினைவு படுத்தியது.

இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த நாட்களிலிருந்து இலங்கையின் கொடூரக்கீறல்கள் அவனை இறக்கச்செய்தது.

அடுத்த வீட்டுக்குழந்தையின்
அழுகுரல் கேட்கும் போதெல்லாம் அவனது இரண்டுவயது மகனின் துண்டுதுண்டான உடலை பொறுக்கிய அவனது விரல்களையே வெறித்துப் பார்த்துக்கொள்வான்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் இழக்க கூடாததை அவன் இழந்தான். ( தன் மனைவி குழந்தை ).

தொலைந்து போன அவனது மனைவியை தேடித்தேடி சோர்ந்து போன கவலைகளை அடுத்த வீட்டு எஜமானியம்மாவிடமே கொட்டித்தீர்ப்பான்.

துளித்துளியாய் சேர்த்த மனைவியின் நினைவுகளை மறக்க முடியாமல் மூன்று முறை இலங்கைக்கு சென்று பாதி உயிரோடு திரும்பியிருக்கிறான்
தினேஷ் தன் மனைவியைத்தேடி.

உணர்வுகளற்ற மனிதர்களிடத்திலும், உறவுகளற்ற உலகத்திலும் நொந்து கொண்டே பாதி உயிரோடு வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த,

அவன் அடிக்கடி சென்று அழுதுகொள்ளும் கோவில் கிணற்றில் குதுதித்து
தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தான்.

அது போலவே, ஒரு நான் இந்த உலகை மறந்து
அந்த கோவில் கிணற்றின் மேல் ஏறி நிறு கொண்டான்.

அத கிணற்றில் குதிப்பதற்கு ஆயத்தமான
அவனது காதுகளில் ஒரு பெண்ணின் குரல் கேட்பதை உணர்தன்தான், திரும்பி பார்க்காமலே,

யார் நீ? எதற்க்காக என்னை காப்பாற்ற முயல்கிறாய் ???

பதில் : நான் அடுத்த வீட்டு எஜமானி அம்மாவின் வேலைக்காரி. இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஏதோ ஒன்றை இழந்தவர்கள்தான் அதற்காக உயிரை விடுவது தவறு .....

அந்த குரலை கேட்ட அவன் ஒரு புது உலகம் அவனுக்காய் பிறந்தது போல் உணர்ந்தான்.

சட்டென்று திரும்பிப்பார்த்தான்,,,,

அங்கே அழகிய புன்னகையுடன் அவன் மனைவி நின்றாள்
ஆனந்த வெள்ளத்தில் மனைவியை அணைத்தபடி கண்ணீர் விட்டான்...

அடுத்த வீட்டு எஜமானியம்மாவின் வீட்டு வேலைக்காரிதான் தன் மனைவி என்பது அறியாமலே வாழ்ந்த அவன்..மீண்டும்,
ஒரு வாழ்க்கையை ஆரம்பித்தான் தன மனைவியோடு.

************************
ஏமாற்றமும், இழப்பும் இறைவன் மனிதர்களுக்கு மறைமுகமாக கொடுத்த ஒன்றாகும் ,
எனவே சிந்தித்து செயல் பட்டு சந்தோசமாக வாழுங்கள்
நண்பர்களே .................

இப்படிக்கு,
தனிமையானவள்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (24-Jan-17, 12:24 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 373

மேலே