தமிழா தங்கத் தமிழா

வதை செய்வதைக் கண்டு
பதைக்கிறது உள்ளம் - என்
சதைகளும் துடிக்கிறது
சரிசெய்திடத் தோன்றுகிறது...

அகிம்சை வழிசெய்து - நீ
உரிமை வேண்டுமென்றாய்
அரக்க குணம்கொண்டு - உன்
உயிரை பறிக்கிறார்களே....

உன் மீது இன்று விழுந்த அடிகளெல்லாம்
நாளைய சரித்திரத்தின் படிகளாகட்டும்
திரண்டெளு என்தமிழனே - இன்றே
வெருண்டெளு என்இளைஞனே......

அவமானங்களின் அவலங்களும்
அடிகளின் தழும்புகளும்
ஆறியவுடன் அடங்கிடாதே...
அறிவிலிகளின் ஆட்சியதை
அடியோடொழித்திடப் புறப்படு.....

அம்மாவென்ற சிம்மாசனத்தை வீழ்த்தி
அத்துமீறி அரங்கில் வீற்றிருக்கும்
அசிங்கங்களைத் துடைத்திட
ஒற்றுமை என்னும் ஆயுதமெடு - அவர்களை
அடக்கும் வரைப் போராடு.....

வாலிபத்தின் வீரியத்தை
ஆட்சியமைக்க வித்தாக்கு
மேதைகளின் வளிகாட்டலில்
மூடர்களை ஒழித்துக்கட்டி
வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பு.....

உன்னை அடிமையாக்கிய
அருகதையற்ற ஆட்சியாளனை
உன் புத்திக்கூர்மையில் வென்று
உன் சந்ததிக்கொரு வாழ்வுதரப் பாடுபடு

தமிழனாயப் பிறந்ததைத்தவிர
குற்றமென்ன நீ செய்தாய்
சுத்தமொன்று செய்துவிட
சந்தர்ப்பமும் அவனளித்தான்
சலனமின்றிக் காய்நகர்த்து....

ஊடகச் சக்தி உண்டு
உணர்வுகளின் சங்கமமுண்டு
மொத்தமாய்த் தமிழகமும்
உன் காலடியில்
திரண்டுவிடக் காத்திருக்கிறது
இனமத பேதமின்றி
மனிதம் என்ற எழுச்சிகண்டு
மகிழும் நாளையை உருவாக்கிடு தமிழா....
என் தமிழா தங்கத் தமிழா......

எழுதியவர் : நேசமுடன் ஹாசிம் (24-Jan-17, 1:44 pm)
பார்வை : 127

மேலே