இனி ஒரு விதி செய்வோம்

கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும்

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம்

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்

வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ

இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நிலம் இருந்தாலும் தேராதுங்க சொச்சம்

விவசாயி நமெக்கெல்லாம் போட்டால் தான் சோறு
அவன் நிலைகாக்க நாம் என்ன செய்தோம் கைமாறு

அலங்கை பாரு மெரினா பாரு எட்டுத்திக்கும் பாரு
இனி இளைஞர் தாம் இளைஞர் தாம் ஊரு சொல்லும் பாரு

அதிருது பார் அதிருது பார் அதிருது ஊர் மொத்தம்
தமிழர் தாம் தமிழர் தாம் புகழ் வான் உலகு எட்டும்

#JusticeForJallikattu

எழுதியவர் : இராஜராஜன் (24-Jan-17, 6:05 pm)
பார்வை : 1998

மேலே