காதல் தவம்

ஏனடி என்னை
கொல்கிறாய்?...
தினம் தினம் உன்
நினைவுகளால்
என்னை மெல்கிறாய் ?..

உன்னை கண்ட
நாள்முதலாய் ...
நீயே என்
ஜீவன் ..!
சுவாசமாய் மாறினாய்யடி

என்னவள் நீயென
ஐந்து வருடமாய்
தவமாய் தவமிருந்து காத்திருக்கிறேனடி ..!
உன் மௌனம் கலையாதா ..?

உன் மேல் நான்
கொண்ட காதல்
என்றாவது புரியுமென
காத்திருக்கும் எனக்கு
சோதனை பல ..

உலகில் உள்ள
பல்கோடிப்பெண்கள் வந்து
நின்றாலும் ..!
உன் வரவை மட்டும்
காணவே கண்கள் ஏங்கும்..!

ஒரே ஒரு வார்த்தை
சொல்லிவிடு உயிரே ..
நான் வாழும் காலமெல்லாம்
மகிழ்ச்சி அருவியில்
நீ நீந்திட ..

படகாய் நானிருப்பேன் ..!
உன் கனவுகள்
என் இலட்சியம் ..!
உனக்கு நான் என்றும் ஏணி ..
ஜெய்திட ... காதலே ..!

எழுதியவர் : பச்சைப்பனிமலர் (24-Jan-17, 5:10 pm)
Tanglish : kaadhal thavam
பார்வை : 167

மேலே