நிசத்தின் நிழல்
நிசப்தமான சூழல்
நிலைத்த நிலை
சப்தமில்லா நொடிகள்
தெளிவானக் காட்சி
விழிகள் கண்டிடும்
நிசத்தின் நிழலை ....
குழப்பமற்ற மனம்
பொருத்தமான இலக்கு
எல்லைக்குள் பொறுமை
நேர்மையான நோக்கம்
நெஞ்சம் காட்டிடும்
நிசத்தின் நிழலை ...
அழுக்கில்லா எண்ணம்
தடைபோடும் தன்மானம்
எழுச்சிமிகு சிந்தனை
சுயமரியாதை உணர்வு
விழிகள் நோக்கிடும்
நிசத்தின் நிழலை ...
பகுத்தறிவுப் பாதை
வகுத்தறியும் வழிமுறை
தொகுத்திடும் செயல்முறை
நிறைவேற்றும் ஆற்றல்
தெரிந்திட வைக்கும்
நிசத்தின் நிழலை ...
கலங்காத உள்ளம்
கடமையில் கண்ணியம்
விதிக்கும் சுயகட்டுப்பாடு
அச்சமற்ற மனநிலை
அழகாய் காணலாம்
நிசத்தின் நிழலை ...
போலிகளைப் புறந்தள்ளி
உண்மையை உணர்ந்தால்
நிச்சயம் தெரியப்படுத்தும்
நிசத்தின் நிழலை ...
பழனி குமார்