தமிழன் திமிரும் திமிலும்

எழுந்து வாடா வாடிவாசல்
வலிமையோடு தட்டி திறந்து
ஏறு தழுவ களம் இறங்கு...

துணிந்து நீயும் எழுந்த பின்பு
நம்பிக்கைதானே உனது தெம்பு
முயலுக்கு ஏது காளை கொம்பு?

தமிழினக் காளைக்கு ஈடாகுமா?
இந்த வளர்ப்பு முயலு..!

தூங்கும் புலிக்கு பூனை ஈடா?
சிங்கத்தையும் கொண்டு வாடா
அதையும் அடக்குவான் எம்புள்ள...
தமிழ் புலிக்கு நாய் எந்த மூலை ?

எம்மக்களின் உணர்வை நீ உணரவில்லை
தமிழனுக்கு என்றும் வீழ்ச்சியில்லை..
தமிழனோட வரலாற்றை
தெரிந்து கொள்ளடா உடனே...

தன்மானம் விட உயிர் பெரிதல்ல
தமிழன் ஒன்றும் நேற்று முளைத்த காளானில்லை..

பிரிந்து கிடந்த வீரத்தமிழனை
ஒன்றிணைத்தமைக்கு நன்றி சொல்வேன்..
நாளை வாடிவாசல் வந்து பாரு...
தமிழினக் காளையர் திமிரையும்...
வலிமை மிக்க காளைகள் திமிலையும்...!
அதன் பின் புகழ்வாய் ...
தமிழன் வீரத்தை உலகமெங்கும்...

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jan-17, 7:24 pm)
பார்வை : 2324

மேலே