காலப்பொய்

இலக்கியகுறிப்பொன்றில்
தோல் மறைக்கும்
ஆடைகள் களைந்து
வானமென நீ
நிலைபெற்றிருக்கிறாய்

ஒளிரும் பொட்டுக்களாய்
நட்சத்திரங்கள் உன்னில்
முளைவிடும் கணமெங்கும்
என் கண்களில்
கருப்புச்சாயம்

சில்லறை நிலவுகளின்
பெட்டகத்திலிருந்து
நீ கொட்டும் இரவுகளின்
நிறம் வெள்ளையென
நிறுவிக்கொண்டிருக்க
ரத்தச்சிவப்பில் சில இரவுகள்

என் வர்ணமற்ற ரத்தபஞ்சுகளை
வெள்ளையாகவும் கறுப்பாகவும்
உன் ஆடைகளாக்கினாய்
பின் என்னிலிருந்தும்
உன்னிலிருந்தும் பிறந்தது
கண்டங்கள்

இன்னும் காத்திருக்கிறேன்
சமுத்திரமென
நீயும் நானும் சேருகையில்
கிரகங்களில் ஒன்று
குறைந்திருக்கும்

மாமிசகாட்டின் காற்று
மொட்டொன்றை திறக்கையில்
பூ வாசத்தில் முற்றுப்பெற்றது
இலக்கியகுறிப்பு

எழுதியவர் : அர்த்தனன் (25-Jan-17, 1:14 am)
சேர்த்தது : அர்த்தனன்
பார்வை : 76

மேலே