ஏறு தழுவம் சமுக உழவும்

இருளும் பனியும்
என்ன செய்யும்!
சூரியக்கதிர்களை

மனுநீதி வம்சம்
மண்ணோடு மறையுமென்ற
கனவில் மண்விழுந்ததா
பீட்டா மன்னர்களே!
இது ஆரம்பமே

சட்டம் இருட்டறைதான்
ஆயிரம் தீக்குச்சிகளை
அணைக்கலாம்
நட்சத்திரங்களை
என்ன செய்வாய்

வியர்வை வாசம்
அறியாத வீனர்களே
எம் விடுதலை
உணர்வுபற்றிஅறிவாயா?

புலிக்கே முறமெடுத்த
தமிழச்சி கருவில்வந்த
கரிகால வம்சமடா
கட்டுண்டா போவோம்
உன் கட்டளைக்கு

அன்னைக்கு
அடுத்த(தாய்)
எங்கள் அன்புக்கு
ஆ களே
புரிவாயா

எங்கள் இன
அடையாளத்தை
காலம் அரித்தபின்
மீதமிருப்பதில்
காளையடக்கதலுமொன்று
விளையாட்டெனெ
விடுவோமென்றா
நினைத்துவிட்டாய்

என் கலாசார
கடலை வற்றவைக்க
உன் கையளவு
மண் போதுமா!

என் நெல்லில்
வயிறு நிறைக்கும்
நீயா
என் சுதந்திரத்தை
சூறையாட எண்ணுகிறாய்
நாய்கும் ஒருபடி கீழ்தான் நீ
நாய்களே மன்னிக்க

காளைகளையும்
விட்டுவைக்காத
மேல்தேசகுத்தகை
அடிமைகளே
கொஞ்சம் பொறுத்திரு

இளைஞனின்
அரசியலில் (பார்)ரதமே
நகரும்

புதிதல்ல போராட்டம்
தமிழெங்கள் உயிரோட்டம்
வாழ்க சுதந்திர வேட்கை

எழுதியவர் : அர்த்தனன் (25-Jan-17, 8:46 pm)
பார்வை : 75

மேலே