காற்றாடியும் மனிதனும்

காற்றினிலே அசைந்தாடும் காற்றாடி
அதை ஆட வைப்பவன் மனிதன்
அவன் கையில் நூல் உள்ளவரைத்தான்
காற்றாடி அசையும் குதிக்கும் ஆடும்
நூலறுந்தால் கைவிட்டு போய்விடும் காற்றாடி
காற்றும் நின்றுவிட ஆடாது அசையாது
மண்ணை நோக்கி வந்து வீழும்
இல்லை மத்தியிலே எங்காவது சிக்கி
சின்னாபின்னம் ஆகிவிடும்

மூச்ச்சு உள்ளவரைதான் மனிதனின்
ஆட்டமெல்லாம்
காற்றுள்ளவரை ஆடும் காற்றாடிபோல்
தன்னை ஆட்டிப்படைப்பவன் மனிதன்
என்பதை காற்றாடி மறந்தால்
நூலறுந்தால் காற்றாடி மாய்ந்துவிடும்
மனம் போன போக்கெல்லாம்
மனிதன் போனால் நூலறுந்த
காற்றாடி போல திசைதெரியாது
அலைவான் திரிவான் அவன்
மூச்சு ஒரு நாள் நின்றுபோனால்
காற்றாடிபோல அற்றுபோவான்
உயிரற்றுப்போவான்

தன்னை ஆட்டுவிப்பவன் ஆண்டவன் தான்
என்பதை அறிந்து கொண்டால்
மனதை அடக்கி ஆண்டால்
காற்றுள்ளவரை ஆடும் காற்றாடிபோல்
மூச்சு உள்ளவரை நல் வாழ்வு வாழ்ந்திடலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jan-17, 8:47 pm)
பார்வை : 69

மேலே