காதல் வலி

வெறுக்காத என்னை வெறுக்காத
நான் காதல் சொன்ன காரணத்தால
நான் காதலிச்சா தப்பா
உம்மேல பாசம் கொண்டேன் இப்போ
வெயில் காயும் நேரத்தில மழை
வந்ததென்ன
மழைகேட்ட நேரத்தில வெப்பம்
எரித்ததென்ன
காதல் சொன்ன நேரத்தில கரைய
எட்டாததுயென்ன
உன் மேல காதலால ஓடம் தத்தளித்ததென்ன
எனக்கான மான துள்ளி நடந்த
உனக்கென நானே ஏங்கி தவிக்க

என் இதயம் இருன்டெதென்ன
இந்த உலகம் உருண்டெதென்ன
நான் கலங்கி தவித்தென்ன
மனம் உருகி நின்னெதென்ன
உன்னை நெனச்ச நெனப்புயென்ன
உன்னை பார்க்க தவிப்யென்ன
நீ இல்லாம நான்
வாழும் வாழ்கையென்ன
காலம் முழுக்க காதல் சுமந்த வலியென்ன
மீதி வாழ்கை உன்ன சுத்தும்
மனமும்யென்ன
என் காதல் பிடிக்கலையா
என் மேல் உனக்கு பிடிப்பு
இல்லையா.....

காதல் நீ மறுக்காத
மனதில் இருந்து
ஒதுக்காதே
காதல் என்ன போரட்டாமா
வாழ்வு என்றும் நீரோட்டமா
கானல் நீரின் மேலோட்டமா
உன் மனம் என்னை மறுக்காதுமா
காதல் சொல்ல தவிப்பேதுமா
என்னுள் நீயே போராட்டமா
கண்ணுக்குள் நீயே அலையாட்டமா
நெஞ்சுக்குள் நீயே வலிதானம்மா
ஒரே ஒரு சொல்லுபோதும்
என் உசிரு பிழைக்குமடி...

எழுதியவர் : சிவசக்தி (26-Jan-17, 8:47 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal vali
பார்வை : 90

மேலே