செழிக்குமா என் செந்தமிழ் நாடு

சாதிமதம் பார்க்காமல் விடுதலையை தேட,
வீதிஎங்கும் குருதிஆறு தறிகெட்டு ஓட..
பாதிமக்கள் சிறைபட்டு வலிகொண்டு வாட,
இன்று
சுதந்திரத்தை அடைந்துவிட்டோம்
வெற்றிகளிப்போட..
குடியரசுநாட்டிலே இருக்கின்றோம்..வறுமை
பிடியிலே மாட்டியே தவிக்கின்றோம்.
இலஞ்சமும், ஊழலும் மலிந்திருக்க,இங்கே
பஞ்சம் மட்டும் கருவேலாய் தழைத்திருக்க..
சுயநலமாய் வாழ்வதை விட்டுடுவோம்.
பொதுநல சிந்தனைக்கு வித்திடுவோம்.
உணவுதரும் விவசாயம் நம் உடமை..அதை
உதறிவிட நினைப்பது தான்
பெரும் மடமை.
மாரிஅது பொய்த்ததால் ஏரி.குளம் வற்றியதே..
ஏறிவரும் விளைவாசி இமயம் தாண்டி எட்டியதே..
அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ளோம்-இருந்தும்
வயல்வெளியை பொட்டலாய் கொண்டுள்ளோம்.
மாற்றத்தை கொண்டுவா மாமனிதா..
நானிலமும் செழிக்குமே நாம் உழுதா...

எழுதியவர் : கு.தமயந்தி (26-Jan-17, 9:18 am)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே