குடியாட்சி சாதனை
மக்களே மன்னரென மார்தட்டி இன்றோடு
ஆகின ஆண்டுகள் அறுபத்தி ஏழு
உன்சாதனை யாதென சோதனை செய்தேன்
வளர்ந்துவரும் வாணிபத்திலோ முதல் இடமாம்
அணுசக்தியிலே நாம் ஆறாம் இடமாம்
தொழில் வளத்திலோ நாம் பத்தாமிடமாம்
உணவு உற்பத்தியில் தன்னிறைவாம் ஆனால்
உண்ண உணவின்றி உலவுவோர் பலராம்
அன்னியத்தில் வீழ்ந்தோம் சுயத்தை இழந்தோம்
தாய்மொழியை நாம் தகா மொழியாக்கினோம்
பண்பாடு காக்கவே இங்கு படாதபாடாம்
இளைஞர்கள் எழுச்சியே இன்றைய பேச்சாம்
வெள்ளையரிடம் இருந்து கொள்ளையர் கைக்கு
குடிமாறியது தானோ குடியாட்சி சாதனை
சாதனை இதுவரை யாவை யாயினும்
அல்லவை அகற்றி நல்லவை காக்க
கொடியினை ஏற்றுவோம் இக்குடியரசு நாளில்