புரட்சி செய் தமிழா
அடிச்சிட்டா..,
அடிச்சிட்டா ..,
அடங்குற ஆளா நீ
உணர்ச்சிகொள்
உயிர்த்தெழு
நோண்டினா
தோண்டினா
பொறுக்குற இனமா நீ
விழித்தெழு
வீம்புகொள்
தடுக்கவா
தமிழனாய் பிறந்தாய் நீ
எட்டி மிதி
ஏறி நில்
துரோகம் அறு
தூய அறிவை விளை
எட்டும் தூரம்
இல்லையென்றாலும்
எட்டி பிடிக்க
நிலவில்லையென்றாலும்
முயற்சி செய்
புரட்சி செய்
தன்மானமில்லா தமிழா நீ
வேணாம்
அடங்க மறு, அத்து மீறு
தடைகளை உடை
தாண்டிச்செல்
இடர்களில் படு
எழுக மறக்காதே
விண்ணிலே நீ மறைவதனாலும்
மண்ணிலே தமிழ் விதைக்க மறக்காதே