குடியரசு தினமா

குடியரசு தினமா..?
யாருக்கு.......
குடித்துப் பாழாகும் எம் குடிமகன்களுக்கா?
குடியுரிமை அறியாத எம்
குடிமக்களுக்கா?
பிற நாட்டில் அடகான
குடிபெயர் பிள்ளைகளுக்கா?
குடித்தனம் நடத்த தெரியாத குடும்பங்களுக்கா?
இல்லை
என் போல்,உம் போல்
ஏமாளிகளுக்க?

இறந்து கிடக்கும் விவசாயிகளின் சடலத்துக்கு வெளியே
பொங்களிட்டது போல்
காண ஆளில்லா கழனி வேலை செய்பவர்க்கு பின்னே உறவுகளை கண்டு வந்தது போல்
பண்பாடு பாழாவதை, வேடிக்கைப் பார்த்து,நமக்கான போராளிகளின் இரத்தத்தின் பின் வரும் இத்தினமும்
எப்போதும் போல்
எல்லாவற்றையும் போல்
தெரியாது கொண்டாடப்படத்தான் போகிறது...
அதனால்
சொல்கிறேன்......
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : மீனாட்சி (26-Jan-17, 10:16 am)
பார்வை : 61

மேலே