ஆயிரமும் ஐந்நூறும்
ஏழைகளின் இன்பம் துடைக்க
இன்னுயிர் நீத்தனவோ
ஆயிரமும் ஐந்நுரறும்
இரவுப்பகலாய் இன்பத்தை
மறந்து உழைக்கப்பட்ட
ரூபாய்கள் உண்ணாநோன்பு
இருக்க ஏழைகளும்
தஞ்சம் புகுந்தனரோ
பசியின் மடியில்!!!!
வெட்டி வெட்டி
உழைத்த பணமெல்லாம்
வியர்வைபட்டு கருப்பாக
கருப்புபணம் என்றுஇதை
உரைத்தாயோ மானிடனே!!!!!
படித்த பட்டதாரியெல்லாம்
பரிவர்த்தனைகளை மறுக்க
மறுக்காமல் இதில்
சேர்க்க நினைப்பது
ஏழைகளையோ பதவிகாரர்
வீட்டில் பறிகொடுத்த
சுதந்திரத்தை அடைய
வெளிவந்த உன்னை
செல்ல மறுத்த்தோ
இந்த நாடு
ஏழைகளுடன் நீ
தனிமையிலும் இனிமை
காண பதவிகளுடன்
கூட்டத்திலும் உன்னை
வெறுமை வெல்ல
விடுவிக்க நினைத்த்து
யாரோ!!! விடை
தெரியாமல் நிற்பவர்
தான் யாரோ!!!!!!