நக நானூற்று கவிஞனே

நக நானூற்று கவிஞனே!

காதலியாள்
நகத்திற்கு கவிதை சொன்ன
நக நானூற்று கவிஞனே ! அவள்
அகத்தில் நீயிருக்க உன்னுள் புறப்படுமே இச்
செகம் போற்றும் நானூறு கவிதைகள்

உன்னை புலவனாக்கி
உலகத்தை உயிர்ப்புடன் வைக்கிறது இந்த
உன்னதமான உறவின் துளிர்ப்பே
உன்னையும் என்னையும் இந்த நாள் வரை
மனிதனாக்கி
மனிதம் செத்து விடாமல் காக்கிறது
தொடர்ந்து எழுதட்டும் உன் கரங்கள்
தொன்றுதொட்டு சொன்ன காதலின் மகத்துவத்தை

அவள் சிரிப்பிலே உன்னை தொலைத்து
அழகில்லாத மலர்களையும் அழகாக்கி
அவனியின்
ஆவணி கோடையிலும்
மார்கழி குளிரென்று கம்பளிக்குள் புகுகின்றாய்

அவள் எப்போதோ பேசிய வார்த்தைகளை உன்
கவிதைக்கு பொருளாகி கவிதைகள் படைக்கின்றாய்
துவண்டுபோன கொடிக்கும்
துடிப்பேற்படுத்தும் துள்ளல் கவிதைகள் தருகின்றாய்

மனிதத்தை பூமியில் நிலைப்படுத்தும்
மகத்துவனே
தொடர்க தொடர்க நும் கவிதை பயணம்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (26-Jan-17, 12:28 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 74

மேலே