முடிவல்ல ஆரம்பம்
பொங்கி எழுந்ததும் நாடகம் அல்ல
பொறுமைக் காத்ததும் பொய்மை அல்ல
கடலெனத் திரண்டதும் காசுக்காக அல்ல
உரிமைக்குப் போராடியதும் சுயநலம் அல்ல
பெண்கள் பெருகியதும் அழைப்பால் அல்ல
குரல்கள் ஒலித்ததும் திரைமறைவில் அல்ல
உணர்ச்சிப் பெருக்கும் கற்பனையானது அல்ல
உலகத்தமிழர் இணைந்தது காட்சிக்காக அல்ல !
அரசுகள் பணிந்ததும் இதுபோன்று அல்ல
நாட்டையே உலுக்கியதும் நடந்தது அல்ல
உலகமே வியந்து நோக்கியதும் அல்ல
உள்ளங்கள் அதிர்ந்ததும் பொய்யும் அல்ல
இனமானம் காத்ததில் தோல்வியே அல்ல
தன்மானம் இழந்தவர்கள் தமிழரே அல்ல !
முடிவல்ல இதுதான் ஆரம்பம் அறிந்திடுக
நாளையத் தலைவர் இவர்களில் ஒருவரே !
( அல்ல = இல்லை )
பழனி குமார்