மெரினாவில் ஜல்லிக்கட்டு

மெரினாவில்#ஜல்லிக்கட்டு

தேர்த் திருவிழாக் கோலம்
கடற்கரை சாலையெங்கெங்கும்
கண்கொள்ளா காட்சியிலே
பொங்கி வழியுது ஆனந்தம்..!

சல்லிக்கட்டு காளையெல்லாம்
துள்ளித் துள்ளியோடுதடா - அலங்கா
நல்லூரும் தோற்றுவிடும்
தொடர் ஆட்டம் நடக்குதடா.....!

சல்லிக்கட்டு என்றிருந்தால்
ஓர் நாளினில் ஓய்ந்திருக்கும்
அதை சட்டம் கொண்டு முடுக்க
காளை கட்டறுத்து ஓடுதடா..!

வாடிவாசல் வேண்டாம் - கடலோரம்
காணுங்கள் காளைகளை
சீவிய வார்த்தை கூவல்
சிலிர்த்தோடுது சீண்டல்களில்..!

யார் பிடிப்பார் வீரனாய் நின்று
காளை பாய்ந்தோடுது வீறுகொண்டு
ஒன்றடக்க ஒன்று பாயும்
இது ஓயாத கடலலையாகும்..!

அறுபத்து மூவர் விழாவோ
சூரசம்ஹார விழாவோ
ஆரவாரமொடு மேளங்கள்
ஆடல் பாடலொடு தாளங்கள்..!

வெற்றி கிட்டிடும் முன்பே
வெற்றி முரசுகள் விண்ணெட்ட
காதை பிளந்திடும் கோஷங்கள்
கரைபுரண்டோடுது உற்சாகங்கள்..!

தமிழன் ஒற்றுமை வெல்லட்டும்
சதி அனைத்திற்கும் சங்கூதட்டும்
விதி செய்வோம் நல் மதியில்
வெற்றித் தமிழனின் மடியில்..!

-சொ.சாந்தி -

(மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் வாசித்த கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (26-Jan-17, 9:08 pm)
பார்வை : 162

மேலே