ஒரு காதலி-காதலர் காதல் டூயட்
ஆண் : நீ தானே என் வளர்மதி
நீ தானே என் நிறைமதி
நீ தானே என் மனதினிலே
என்றும் பதிந்த இன்ப நிலா
நீ தானே ...........................
பெண் : நீ தானே என் உதய ரவி
நீ தானே என் இதய ரவி
நீ தானே என் மனதை கவர்ந்த
சுந்தர மன்மத ராஜா குமாரன்
நீ தானே ..................
அந்தி மயங்கும் நேரம்
அல்லி நிலாவைத் தேடும் நேரம்
உன் வரவைத்து தேடி அலையும்
இந்த பாவை விழிகளைப் பாராயோ
என்னைத் தேடி ஓடி வாராயோ
நீ தானே என் உதய ரவி
நீ தானே இதயத்தை திருடிய
சுந்தர மன்மத ராஜா குமாரன்
நீ தானே .......................
ஆண் : கலங்கிடாதே கண்ணே
இதோ ஓடி வந்துவிட்டேன்
என் காதலியே உன்னை
என்னவளாய் ஏற்று வாழவைத்திடவே
உதய ரவி நான் காலையில்
உன்னை தாமரையாய்
மலரவைப்பேன் கண்ணே பின்னர்
அந்தி மாலையில், முன் இரவினில்
அந்த அல்லியைப் போல
மலரவைப்பேன் உன்னை
இன்பத்தில் ஆழ்த்திடுவேன்
நீ தானே...............................