உன் கடந்த கால உறவு

.................உன் கடந்த கால உறவு................

உன் கடந்த காலப் பக்கங்களை கவிதையாய் அலங்கரித்தவள்...
எழுத்துப் பிழைகளின் கலப்படத்தில் கனவுலகச்சிறையினுள்ளே மாட்டிக் கொண்டேன் சிறைக்கைதியாய்....!

இறந்த காலத்தின் நினைவுகளில் உன் உறவென்னும் முகவரியைச் சுமந்தவள்
நிகழ்கால நிதர்சனத்தில் மாயச்சுவரின் மேலே ஒட்டிக் கொண்டேன் வண்ணமில்லாத ஓவியங்களாய்....!

மழைத்துளிகளாய் சங்கமித்த காதல் புல்லில் விழுந்த பனித்துளிகளாய் மறைந்தது...
உறக்கம் தொலைத்த இரவுகளெல்லாம் கண் முன்னே தோன்றிடும் விமர்சனங்களாய் ஆனது...!

கண்ணீரில் கரைந்த சுவடுகள் காற்றாய் தொடர்கிறது உன் காலடித்தடங்களை...
விழிகள் மட்டுமே பேசிக்கொண்ட உன்னுடனான உறவின் தருணங்களை மௌனமாய் மொழி பெயர்த்துக் கொல்கிறது எனக்குள் வாழும் உன் இதயம்....!

-உதயசகி-
யாழ்ப்பாணம்

எழுதியவர் : அன்புடன் சகி (27-Jan-17, 11:15 pm)
பார்வை : 438

மேலே