காதல் அழகானது

அன்பே !!!!!!!
காதல் .....
கலைந்து போகும்
கண்ணோரக் கனவல்ல !!!!!
இரு மனங்களின்
வாடாத மலர்ச்சி !!!

கண நேரத்தில் களைத்து...
தனித்துப் போகும்
உடலின்பச் சுகமல்ல !!!!!
இரு உள்ளங்களின் ஐக்கியம் !

கண்ணே !
இது இரு மனங்களின்
கூட்டுப் பாடல் !
நல்லிதயங்களின்
நாட்டுப் பாடல் !

இது உறங்கத்
தலையணைக் கேட்காது
அழகு பார்க்காது
உள்ளம் பார்க்கும்
உன்னதக் கலை !!!
காதல் அழகானது .

ஒருவரையுருவர்
பூரணமாக்கி
நேரங்களை விழுங்கி
பாரங்களைக் குறைக்கும்
அத்வைத யோகம் இது !!!!!!


ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jan-17, 11:35 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 109

மேலே