ஆசை
*ஆசை*
*********
ரெண்டு அம்மா, அப்பா....
இந்த
ரெண்டு குடும்பத்திலும்
ஒரு அஞ்சு வயசு ஆண் குழந்தை...
இதுல
ஒரு அம்மா, அப்பாவோட வேலைன்னு பார்த்தா...
இன்னொரு அம்மா, அப்பா வேண்டாம்னு
தெருவுல தூக்கிப்போடுற பொருள
பொறுக்கி எடுத்து காசு சம்பாதிக்கிறது....
ஒரு நாள் இவங்க வழக்கம் போல...
தெருவுல வேண்டாதத பொறுக்க போறாங்க...
இவங்க குழந்தையும் கூடப் போகுது...
தன்னோட பங்குக்கு
கிடைக்கிற பிளாஸ்டிக் பொருள
அம்மாவோட சாக்குப்பையில எடுத்துப்போடுது...
அப்ப....
போகுற வழியில ஒரு கடைய பார்க்குது....
கடையில ஒரு அழகான பொம்மை இருக்குது...
பார்த்த உடனே
அதன் மேல் இந்த குழந்தைக்கு ஒரு ஆசை....!
அது வேணும்னு அடம்பிடிக்குது...
ஆனா அத வாங்கித்தர
இந்த அம்மா, அப்பாட்ட காசு இல்ல....!!
அப்படி இப்படி எதைய்யோ சொல்லி...
குழந்தைய சமாதானப்படுத்தி கூப்டு போறாங்க....
அந்த நேரம்...
அந்த அம்மா, அப்பா தன் குழந்தையுடன்
அந்த கடைக்கு வாராங்க....
அதே பொம்மைய அந்த குழந்தையும் பார்க்குது...
அதன் மேல் ஆசைப்படுது...
எந்த மறுப்பும் சொல்லாமல்
வாங்கி கொடுத்துடுறாங்க...
அந்த பொம்மைய வாங்குனதுல இருந்து...
தூங்கும் போதும் சரி...
தூங்கி எழுந்திரிச்ச பிறகும் சரி....
எப்ப பார்த்தாலும் அந்த குழந்தை...
அந்த பொம்மையும் கையுமாத்தான் திரியுது...
சில நாளில்...
இந்த குழந்தை அந்த பொம்மைய மறந்திடுச்சி...
அந்த குழந்தை
பொம்மையோடு விளையாடி விளையாடி
அத பிச்சி போட்டுடுச்சி....
இப்ப
அந்த பொம்மை குப்பைக்கு வருது....
வழக்கம் போல
இந்த அம்மா, அப்பா
குப்பையில பொறுக்க வாராங்க...
கூட தன் குழந்தையுடன்....
அந்த பொம்மை
இந்த குழந்தையின் கண்ணுல படுது...
அத தன் கையால் எடுத்து...
தன் அம்மாவை பார்த்து....
"ம்மா.... என்று சொல்ல...
உடனே
அம்மா சாக்குப்பைய விரித்துக்காட்ட...!
இந்த குழந்தை
அந்த பொம்மைய உள்ள போட்டுட்டு...
அடுத்த பொருள குப்பையில தேட போயிடுச்சி
வழக்கம் போல...!!
உண்மையில் ஆசை என்பது
அழகு இருக்குற வரைக்கும் தான்...
அன்புதான் நிரந்திரம்...
இவண்
✒க.முரளி (spark MRL K)