தூக்கணாங் குருவி கூடு

தூக்கணாங் குருவிகூடு
----- துன்பமில்லை எம்மருங்கும் .
ஆக்கத்தைப் பார்த்தீரா!
------ அழகானக் கூட்டினையே
தாக்கங்கள் ஏதுமின்றி
------- தளராத முயற்சியினால்
ஊக்கமாகக் கட்டிவைத்த
------ உறைவிடமே இதுதானே !


குருவிகளின் கூட்டினையே
------- கூட்டோடு அழித்துவரும்
சுருக்கமான மானிடனே !
------ சுகம்வருமோ உலகினிலே !
வருத்தத்தைத் தராதீர்கள்
------- வாடிடுமே உயிர்களுமே !
திருப்பங்கள் சேரட்டும் .
------- திரளட்டும் குருவிகளே !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jan-17, 11:14 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 137

மேலே