உழைப்பிற்கு வயதில்லை

உழைப்பிற்கு வயதில்லை
------ உரிமைக்கும் இடமுண்டே.
தழைக்கின்ற சந்ததிகள்
------ தரமான உழைப்பிற்கே
பிழைப்புண்டு என்றதொரு
------ பிசகாத உண்மையினை
மழைபோலே நம்பிடுவீர்
------ மங்காதே உலகினிலே !
வழக்கங்கள் பழமொழிகள்
------ வாசமுடன் சொல்லுகின்ற
பழக்கங்கள் பண்புடைய
------- பாசமிகு நீதிநெறி !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jan-17, 11:30 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே