மணமாலை ஒன்று தான் தீர்விதற்கு
கன்னியரும் காளையரும்
கருத்தாலொன்றி கண்களினால்
செய்தவமே காதலாகும்.
உள்ளத்தின் ஊடேதான் நுழையுமம்பு அது
உடல் நோக்கா உயர் பண்பால்
வளருமன்பு!
மொழி குறையும் விழிவிரியும்
வெறுமையாகும் புவிகுறுகும்
களிபெருகும் கள்ளமில்லா
இருமனங்களொரு மனமாதல் காதல்!
சாதலினும் வாழுமடா உண்மை காதல்!
உயிர்போவதுமே ஒரு சுகமே உற்றாறோடு!
இருசாதியிடை எழுமுணர்வே காதலன்றி
மற்ற சாதிகளுமுண்டிதற்கோ?மதங்ளுண்டோ?
மனமொத்த பிறகினி சடங்கேதற்கு?
மணமாலை ஒன்றுதான் தீர்விதற்கு!