என்னவளுக்காக

மலரைவிட மென்மையானவள் என்று
எனது ஏடுகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ...
பார்வைக்காக காத்திருந்த என்னை
வஞ்சகமாய்ப் பார்க்காமல் சினத்துடன்
பரிதவிக்கவிட்டுப் போன என்னவளுக்காக...
எனது எழுத்துக்களில் அவளைப் பற்றி
பொய்யினைப் பூசி வைத்தேன் ...
அவள் மீதான என் உணர்வுகளைப் பற்றி
மெய்யினைப் பேசி வைத்தேன்...
எனது ஏக்கங்களையும் உணர்வுகளையும்
எடுத்துக்காட்டும் மெய்யினை விட
அதை எள்ளி நகையாடும் பொய்யினை
மிகுதியாக ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
என்னவளின் உணர்வுகளை
எழுத்துக்களில்கூட புண்படுத்த விரும்பாமல்
பண்படுத்திக்கொண்டிருக்கிறேன்
அவள் எப்படியும் படிக்கப்போவதில்லை
என்று தெரிந்தும்...