ஊடல்
மது....
மது மயக்கத்தில் மதி மயங்கி
என் விதி எழுதிய பிரம்மன்
உனை பிரிந்து அழ சதி செய்தானடி...
உன் பிரிவாலே நான் குடித்த
மதுவிலும் மயக்கமில்லை
வெண்மதி நீ என் அருகில் இல்லாததால்
என் மதியில் மயக்கம் கண்டேனடி...
உனை மறக்கவும் மனமில்லை
வெறுக்கவும் மனமில்லை
என் ஜோடிபுறா உனை விட்டு பறக்கவும் மனமில்லையடி...
சிந்தை கலங்கி நிற்கும்
என் சிந்தை தெளிய
நீ தானடி என் மருந்து
ஊடல் போதும்
மனதில் கூடல் கொள்ள
வா கண்மணியே...