இரத்த பூமி

சென்னை மாநகரத்தின் ஒரு முக்கியமான இடம் தான் அது. அங்கு அந்த மாலை சூழலில் பதட்டமும் பரப்பரப்பும் காணப்பட!! இரவு நேரத்துக்கு வழி விட்டு நன்றி கூறி விடைப்பெற்றது சூரியன். கல்லூரியில் இருந்து புறப்பட்ட மங்கைகள் தன்னவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றனர். இன்னொருபக்கம் தலையை பிய்த்துக்கொண்டு IT கம்பேனி ஊழியர்கள் செல்ல, அவர்களை பார்த்து ஒரு ஏளன சிரிப்புடன் புறப்பட்டார் அவர் பாஸ். ஆம், நீங்கள் என் அடிமை என்றுமே என்பது போன்ற ஒரு சிரிப்பு அவர் முகத்தில்.
இவற்றை ரசித்துக்கொண்டிருந்த தனா, அறையில் சென்று படுக்க!! அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆம், அண்ணன் என்ற பதட்டமான குரலில் ஒருவன் பேசினான். என்னடா!! என்னாச்சு என்று மிரட்டும் தோரணையில் தனா கேட்க, அவன் தொடர்ந்தான், தனா! அவ்வளவு சொல்லியும் அந்த சேட்டு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹார்பருக்கு புறப்பட்டுவிட்டான் என்றான்.

தனா, சென்னையில் ஒரு பெரும் புள்ளி. எவ்வளவு விலைமதிப்புள்ள பொருளாக இருந்தாலும் சரி!! எந்த ஒரு கட்டப்பஞ்சாயத்து என்றாலும் சரி!! இவனை மீறி எதுமே நடந்திடாது. ஆனால், இன்று அவனையே எதிர்த்துகொண்டு ஒரு சேட்டு கிளம்பிவிட்டான் என்றதும் அவன் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. விளைவு! போனை காதில் வைத்துக்கொண்டு சட்டையை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு அவன் வெளியில் புறப்பட!! போனின் மறுமுனையில் இருந்த சேகர் தொடர்ந்தான்.

அண்ணா!! ஜாக்கிரதை உன்னை கொல்ல ஆள்கள் சுற்றி வளைத்து விட்டனர் என்றான். உடனே ஜன்னலின் அருகில் ஒருவன் நிழலை தெரிந்துகொண்ட தனா!! சட்டென்று தன் கட்டிலிற்கு அடியில் கிடந்த கத்தியை சரியாக ஜன்னல் திரையை நோக்கி வீச!! அந்த ஜன்னல் திரையை கிழித்துக்கொண்டு அந்த கத்தி, சேட்டு அனுப்பிய ஒரு ஆள் மேல் பாய்ந்தது.

தனா பின் ஒருவன் அவன் கையை பிடிக்க!! வேகமாக அவனை சுவற்றில் வைத்து நசுக்கினான் தனா. அந்த அடியாளின் தலை வேகமாக சென்று சுவற்றில் மோத!! அவன் மயங்கி கீழே விழுந்தான்.

அவசர அவசரமாக வந்த சேகர் கார், தனா வீட்டு வாசலில் நிற்க!! தனா வேகமாக வந்து கார் கதவை திறந்து கொண்டு ஏறினான். பின்னே ஒரு வண்டி அவனை துரத்த!! காரில் இருந்த பெற்றோல் குண்டை வீசி அந்த காரை தவிடுபொடியாக்கி புறப்பட்டு ஹார்பரை அடைந்தான்.

வண்டியில் உள்ள சரக்க எல்லாம் இறக்கு என்று சேகருக்கு தனா ஆணையிட!! மூட்டை மூட்டையாய் இறக்கப்பட்டது. மூட்டைக்குள் இருந்த மூச்சுக்காற்று அந்த துவாரத்தின் வழியே தனாவை நெருங்க மெல்ல வந்த தனா, அந்த மூட்டையை அவிழ்த்தான். ஆம், அது அவன் காதலி ருத்ரா தான். ஒரு நிமிடம் துடித்து போனான் தனா. சேட்டை கொல்ல வேண்டுமென்று துடியாய் துடித்தான் தனா. அப்பொழுது அவனுக்கு ஒரு போன் கால்!! ஆம், அது சேட்டு தான். உன் நண்பன் பாண்டியா என் கையில் உள்ளான். பொருட்கள் சரியாக கப்பலில் ஏறாவிட்டால் அவனை கொன்றுவிடுவேன் என்று மிரட்ட!! துடித்து போனான் தனா.
யாரை காப்பாற்றுவது!! தன் தோழனையா??? இல்லை தன் காதலி ருத்ராவையா?? என்று குழம்பி தவித்தான் தனா.

சரி சரக்கை கப்பலில் ஏற்றிவிடுகிறேன். என் ஆட்கள் உன் கப்பலின் பின் வருவார்கள். என் நண்பனை காண நான் வருகிறேன். எதாவது என் நண்பனுக்கு ஆனால்!! உன் குடும்பமே இருக்காது என்று எச்சரித்தான் தனா. பின், ருத்ராவை கவலையுடன் பார்த்து புறப்பட்டான்.
பாண்டியா இருந்த இடத்தை அடைந்தான் தனா. அவன் காயங்களுடன் உயிருக்கு போராட, அவனை கட்டி பிடித்து அழுதான். கோபத்தில் சேகருக்கு போன் செய்ய!! கப்பலில் இருந்த சேட்டு ஆட்களை அவன் சுட்டு தள்ளி அந்த பெண்களை காப்பாற்றினான்.
ஆனால், தனா போலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டான். பாண்டியாவை மருத்துவமனையில் சேர்த்த தனா போலிஸுடன் புறப்பட்டான்.

அவனை போலிசார் கயிற்றால் கட்டி தொங்கவிட்டு அடித்தனர். தனா மயங்கினான். திடிரென்று அவர்களை பார்த்து ஏளன சிரிப்பு ஒன்றை தனா சிரிக்க!! அவன் முகத்தில் வேகமாக தண்ணீரை பாய்ச்சினார்கள் போலீஸ்.

துடித்து எழுந்தான் தனா. அவன் தாயார் டேய்!! போய் பால்பாக்கெட் வாங்கி வா என்று கூற!! ஏம்மா இப்படி தொந்தரவு பண்ணுகிறாய் என்று கத்தினான். எப்ப பார்த்தாலும் கேங்க்ஸ்டர் படம் பார்த்துட்டு எதாவது கனவு காணவேண்டியது என்று திட்டினாள் வித்யா (தனா தாயார்).

சோம்பலுடன் தனா வெளியில் செல்ல!! அவன் தோழன் வேகமாக வந்து மச்சான்!! செல்வத்த போட்டுட்டாங்களாம்டா. ஊரே பத்திக்கிட்டு எரியுது என்று அலறினான். உடனே பால்வாங்க சென்ற நம் தைரிய நாதன் என்கிற தனா வாலியை கீழே போட்டுவிட்டு வேகமாக வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தான்.

ஒரு தலைக்காதலி வீரமான ஆண்மகனை தேட!! அதனால் தைரிய நாதனுக்கு ஏற்பட்ட கனவு தான் இந்த இரத்த பூமி.

எழுதியவர் : பால கார்த்திக் பால சுப்பி (29-Jan-17, 6:40 pm)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
Tanglish : iratha poomi
பார்வை : 296

மேலே