தள்பத்

தள்ளுபத்து, தள்ளுபத்து எங்கடா போயிட்ட?
☺☺☺☺☺☺😊
யக்கா, ஆரத் தள்ளு-ங்கறீங்க,

பத்து-ங்கறீங்க. பத்மாநாதன்-

ன்னு பேரு

வச்சிருக்கறவங்களத்தான் 'பத்து'

-ன்னு செல்லமாக் கூப்புடுவாங்க.

நீங்க எந்தப் பத்தை எதத் தள்ளச்

சொல்லறீங்க?
☺☺☺☺☺😊😊
அடி போடி கூருகெட்ட குப்பாயி.

டெல்லில தமிலுப் பேராசிரியரா

வேல பாக்கற எம் மூத்த பையன்

முத்து இருக்கறானே அவந்தான்

குடும்பத்தோட என்னப் பாக்க

வந்திருக்கறான். அவங் கடைசிப்

பையம் பேருதான் தள்ளுபத்து.

ஏண்டா இப்பிடி வாயில


நொலையாத பேர எம் பேரனுக்கு

வச்சிருக்கறன்னு கேட்டன்.

"ஏம்மா, தமிழ் நாட்டில இருக்கற

தமிலாசிரியருங்க, தமில்ப்

பேராசிரியருங்களே அவுங்க

புள்ளைங்களுக்குத் தமில்ப்

பேருங்கள வைக்கறதக் கேவலமா

நெனைக்கறாங்க. நா பியச்சுடி

(Ph.D.) படிச்சுட்டு நம்ம நாட்டோட


தலநகரத்துல சவகரலாலு நேரு

பல்லுக்கல களகத்துல தமில்ப்

பேராசிரயரா வேல பாக்கறன்.

நாம் போயி எம்

புள்ளைங்களுக்குத் தமில்ப் பேர

வச்சா மத்தவங்க என்னப் பாத்து

சிரிக்கமாட்டாங்களா?"-ன்னு எம்

பையன் டாக்குட்டரு முத்து

கேக்கறாண்டி.
😊😊😊😊😊😊
முத்து சொல்லறதும் நாயந்தா

யக்கா. நம்ம பட்டிக்காட்டுலகூட

எல்லாஞ் சினிமா பாத்துட்டும்

ஊட்டுக்குள்ளயே வேதாளமா

இருக்கற அந்த டிவி பொட்டில

வர்றத எல்லாம் பாத்துட்டு அதுல

வர்ற பேருங்களத்தான் யக்கா

புள்ளைங்களுக்கு பேரா

வைக்கறாங்க. நாம என்ன

செய்யறது. அவுங்க இசட்டம். எம்

பேத்தி ஒருத்தி பேரு சுவ்வேதா.

இன்னொருத்தி பேரு சுவ்வாதி.

யக்கா உம் பேரம் பேரு என்னன்னு

சொன்ன. திரும்பச் சொல்லு

யக்கா.
☺☺☺😊😊

தள்ளுபத்து.

😊😊😊😊😊
இப்ப எனுக்கு புரிஞ்சு போச்சு

யக்கா.
😊😊😊😊😢
என்னடி காத்தாயி சொல்லற?

☺☺☺😊😊😊

யக்கா கலநோரட மகன்

இசுடாலின தளபதி - இசுடாலின்

-ன்னு சொல்லறாங்க இல்லியா?

உம் பேரம் பேரு கண்டிப்பா தளபதி

-யாத்தா இருக்கும். நா எதோ

ரண்டு வருசம் பள்ளிக்கொடத்துல

படிச்சவ. நீ பள்ளிக்கொடமே

போகாதவ. தபால்ல பணம் வந்த

வாங்கறதுக்கு மட்டும்

கையெழுத்துப் போட

கத்துவச்சிருக்கற.

😊😊😢😊😊
ஆமாண்டி காத்தாயி, நீ சொல்லற

மாதிரிதா எம் பேரம் பேர எம்

பையஞ் சொன்னான்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
வட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத்தைச் சார்ந்த மொழிகள். சமஸ்கிருதச் சொற்களை உதறிவிட்டு அவை செயல்பட முடியாது. திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளின் தலைமகள் தமிழே. தமிழில் இருந்து பெற்ற சொற்கள் மற்றும் திரிபு நிலை பெற்ற சொற்களை உதறிவிட்டால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் செயல்பட முடியாது.
☺☺☺☺☺☺😊😊😊😊☺☺☺
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

என் அனுபவம்:

தமிழர்களில்

பெரும்பாலான ஆசிரியர்களும்

பெண்களும் தங்கள்

பிள்ளைகளுக்குப் பிறமொழிப்

பெயர்களைச் சூட்டுவதை

காலத்தின் கட்டாயம் என்று

சொல்லும் நிலையில் உள்ளனர்.

சில பேராசிரியர்களே என்னிடம்

சொன்ன உண்மை இது.

சாகித்திய அகாதமி விருது

பெற்ற

எழுத்தாளர்களும் இந்தப்

பட்டியலில் அடக்கம். எனக்கு

தெரிந்த, என்னுடன் தொடர்பில்

இருக்கும் இரண்டு தமிழ்ப்

பேராசிரியர்கள் குழந்தைகளுக்கு

அழகான தமிழ்ப் பெயர்களைச்

சூட்டியிருக்கிறார்கள்:
1. பேராசிரியர் லெனின்

தங்கப்பா ( இரண்டு முறை

சாகித்திய அகாதமி விருது

பெற்றவர். இவர் சங்க நூல்

ஒன்றையும் வள்ளலாரின் கவிதைத்

தொகுப்பு ஒன்றையும்

ஆங்கிலத்தில் மொழி

பெயர்த்துள்ளார். பல

நூல்களையும்

வெளியிட்டுள்ளார்).

2. பேராசிரியர் (பஞ்சு என்று

அழைக்கப்படும்) பஞ்சாங்கம்.

இந்தியவெங்கும் உள்ள தமிழ்ப்

பேராசிரியர்கள் அறிந்த சிறந்த

சொற்பொழிவாளர். இவர்

சாகித்திய அகாதமியின் பொதுக்

குழு உறுப்பினராக இருந்தவர்.

பல நூல்களையும்

எழுதியிருக்கிறார்).
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

Dalpat = தள்பத் = தலைவர், தளபதி (தமிழாக்கம்)

யுவன் தள்பத் = இளய தளபதி

எழுதியவர் : மலர் (27-Jan-17, 6:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 239

மேலே