வெற்றியின் விளிம்பில்

இடம்: சென்னை

அந்த ஆய்வகத்தை சுற்றிலும் செயற்கை மரங்களும் அதில் பூங்கொத்துகளும் ப்ளாஸ்டிக்கில் பூத்து இருக்க! அதனை சுற்றி மின்மினி பூச்சிகள் போல விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தது. இருப்பினும், அந்த அறையின் உள்ளே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் செல்லும் அளவுக்கு வெட்ட வெளியாக இருக்க, யாராவது சென்று நின்றாலே போதும் வெற்றிட காற்றின் விசையே அவர்களை உள்ளே இழுத்து செல்லும்.
அப்பொழுது, அந்த அறையில் புகை போன்ற ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அது சுற்றி பார்த்துக்கொண்டே செல்ல, எங்கு பார்த்தாலும் பலரும் இறந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை கட்டிப்பிடித்து அழக்கூட இயலாத அந்த ஆத்மா, முன் நோக்கி உள்ளே சென்றது.

அங்கு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அந்த இதயம் உடலின்றி துடித்துக்கொண்டிருந்தது. அந்த கண்ணாடியை தொட, உள் இருந்த இதயம் ஆயிரம் கதைகள் கூற ஆசை கொண்டது. அந்த ஆத்மா அலறல் ஒலியை எழுப்ப, அந்த இதயம் நண்பா என்று குரல் கொடுத்தது.

22.11.௨௦௨௦,

அப்துல் கலாம் அய்யா, நம் நாடு வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு கண்ட ஒரு வருடம் அது. அந்த வருடம் முடிவதற்குள் அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் பிறந்ததை போல் ஒரு உணர்வு எனக்குள். நான் தொட்டிலில் கிடக்க, பலரும் என் கைகளையும் பாதங்களையும் ரசித்துக்கொண்டு சென்றனர். ஐய், குட்டி பையன் கை எவ்வளவு அழகாக, சின்னதாக இருக்கிறது என்று ஒரு பெண் கையை வைத்தாள். அதன் பிறகு தான் தெரிந்தது, அது என் தங்கை என்று.

நான் பிறந்த முதலே இந்த உலகில் நான் பார்த்த சிறு சிறு கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து போனேன். இவர்கள் ஒவ்வொருத்தர்களும் கண்டுபிடித்து இவ்வுலகை விட்டு சென்றாலும், இவர்கள் புகழ் இவ்வுலகில் இன்றும் பேசப்படுகிறது என்று எனக்குள் எண்ணங்கள் தோன்ற, நானும் ஒரு சிறந்த இயந்திர வடிவமைப்பாளராக ஆக வேண்டுமென்று ஆசை கொண்டேன். ஆம், நான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆக வேண்டும் என்று ஆசை கொண்டேன். ஆனால், நான் எடுத்த ஒரு பிரிவோ CSE (Computer Science and Engineering).

என் பெயர் இலட்சியதீரன்.

நான் காலேஜில் செய்முறை செய்யும் பொழுது கூட, கோடிங்க்ஸ் (Codings) பார்க்க மாட்டேன். இந்த கணினியை கண்டுபிடித்த சார்லஸ் பாப்பேஜ் பற்றிய நினைவுகள் தான் எனக்கு வரும். காலேஜில் படிப்பின் மீது நாட்டம் கொள்ளாத நான், வேறு வேலை இல்லாமல் ஒரு பெண்ணை துரத்தினேன் காதல் என்னும் பெயரில். ஆம், அவளும் என்னுடைய வகுப்பு தான்.
ஒரு நாள் அவளுக்கு ப்ராஜக்ட் செய்ய கடைசி நாள் என்று அழுக, நான் அவளுக்கு உதவி செய்ய முன் வந்தேன். எனக்கு தெரிந்த மெக்கானிக்கலை கொண்டு கணினியில் மூலையை செலுத்தினேன். இயந்திரத்தின் மூலம் பேட்டரி இல்லாமலே மடிக்கணினியை இயங்க செய்த ஒன்று தான் என்னுடைய கண்டுபிடிப்பு.

அனைவரும் வாயடைத்து போய் பார்த்தனர். பாராட்டுக்கள் அதிகமாக குவிய கொஞ்ச நாட்களிலே இந்த கண்டுபிடிப்பு என்னுடையது என்று அனைவருக்கும் தெரிந்து போனது. விளைவு, என் இதயம் ஒரு காட்சி பொருளாய் இன்று கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் இன்று அன்பு, பாசம், நேசம் இவை எல்லாம் நமத்து போக, துரோகம், கொடுமை, வன்முறை, ஊழல், வன்கொடுமை, பெண்கொடுமை, கலாச்சாரம், கற்பழிப்பு என்று அதிகரித்த குற்றங்களின் எண்ணிக்கையோ எண்ணில் அடங்காதவை. அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒரு ஆயுதம் தான் என் உயிர்.

இன்றைய எழுச்சிமிகு நாயகன் வேரு யாரும் அல்ல. நம் நாட்டு இளைஞர்களே! தீப்பந்தத்தில் எரியும் நெருப்பை கூட அணைத்துவிடலாம். ஆனால், இளைஞர்களின் சக்தியை அழிக்க இந்த உலகில் ஒருவர் பிறக்கவில்லை. அவர்கள் ஆசைக்கு ஒத்துழைக்க எண்ணிய நான் வன்மத்திற்கு இறையாகி, இன்று இங்கு இந்த பெட்டியில் உடலுடன் இணைய முடியாமல் தவிக்கிறேன்.

அன்று என்னவளுக்கு நான் செய்துக்கொடுத்த ப்ராஜக்ட், என்னுடைய மதிப்பை எனக்கு புரிய வைத்தது. அதனால், அவர்கள் வேண்டுகோளுக்கு நானும் இணங்கினேன். என் உயிரை தந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நான் ஆசை கொண்டேன்.
என்னிடம் இருக்கும் திறமையை கொண்டு ஒரு ரோபோட் உருவாக்க எண்ணினார்கள் அந்த இளைஞர்கள்.

ஆம், அவர்கள் என்னிடம் வந்து பேசினார்கள்.

ஹலோ சார், நாங்கள் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் தான். ஆனால், சிறந்த ஆராய்ச்சியாளன் ஆக வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. இப்பொழுது இங்கு நடக்கும் பிரச்சனைகளை யாரால் தடுக்க முடியுமோ! இல்லையோ! கண்டிப்பாக இளைஞர்களால் முடியும் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆனால், நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள 99 சதவிகிதம் வாய்ப்பே இல்லை. இருந்தாலும் சொல்கிறோம் என்றனர்.

எனக்கு அவர்கள் கூறப்போவதை கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது
என்னுடைய மூளை மட்டும் போதும். அதனை ரோபோட்டுடன் இணைத்து மற்ற பாகங்களை செயற்கை முறையில் உருவாக்கி அந்த ரோபோட்டுக்கு உயிர் கொடுக்க எண்ணினார்கள். அதில் சில சிப்களை பொருத்தி அதன் மூலம் கண்கானிக்க வேண்டும். எங்காவது எதாவது அசம்பாவிதம் நடக்குமேயேனால் கண்டிப்பாக பாதிக்கப்படும் ஒருவர் சத்தம் போடுவார். அந்த அளவினை ஒரு தோராயமாக கணக்கிட்டு செட் செய்யவும் முடிவு செய்தனர்.

என்னிடம் இவ்வாறு கூறி, நான் என்ன செய்வேனோ?? என்ன பதில் கூறுவேனோ?? என்று குழப்பத்துடன் விடைக்காக காத்திருந்தனர்.

சரி, ஒருவேளை பல இடங்களில் ஒரே நேரத்தில் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என்றான் இலட்சியதீரன். அவர்களுக்கோ மிகவும் ஆச்சரியம். சொல்லுங்க ப்ரண்ட்ஸ் என்றான் இலட்சியதீரன்.

சார்,உங்கள் உயிரே போக போகிறது என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் என்னவென்றால் ஆர்வத்துடன் அடுத்து என்ன என்று கேட்கிறீர்கள் என்றனர்.
இலட்சியதீரன் தொடர்ந்தான். எனக்கு உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. இங்கு நடக்கும் அசம்பாவிதங்களை எதிர்த்து போராடாமல் நமக்கென்ன என்று தான் பலரும் போகிறார்கள். ஆனால், நீங்கள் அதனை எதிர்த்து போராட ஒரு மனித உயிரையே வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளீர்கள். ஒரு பொது நலமிக்க காரியத்தை செய்வதற்காக என் முன் ஒரு சுய நலவாதியாக நிற்கின்றீர்கள். சரி நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் என்றான் இலட்சியதீரன்.

சார், ஒரே நேரத்தில் அவர்கள் எழுப்பும் அந்த அதிர்வலைகள் இந்த ரோபோட் பார்வைக்கு வரும். அதனை உணரும் ரோபோட், ஒரே நேரத்தில் அனைத்து அசம்பாவித பகுதிகளிற்கும் சிக்னலை அனுப்பும். அவர்களுக்கே தெரியாமல் அந்த ஒலி, அவர்கள் தலையை ஊடுருவி அவர்கள் உயிரை எடுக்கும். தப்பு செய்யனும் என்று நினைக்கக்கூட பயம் வரும். இவ்வாறு அவர்கள் கூற, இலட்சியதீரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சரி, இது சாத்தியமா நண்பர்களே. ஒருவேளை அந்த ரோபோட், நல்லவர்கள் சத்தத்தை உணர்ந்து அவர்களுக்கு எதாவது ஆகிவிட்டால் என்றான். இல்லை சார், அது மாதிரி ஆகாது. இந்த ரோபோட்டில் மனிதன் எழுப்பும் எல்லா மாதிரியான சத்தங்களையும் முன்பே ப்ரோக்ராம் செய்துவிடுவோம். அதற்கு ஏற்றவாறு இந்த ரோபோட் செயல்படும். நல்லவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் கண்டிப்பாக அழும் ஒரு குரலோ இல்லை என்றால் ஆதங்கப்படும் ஒரு குரலோ கொடுப்பார்கள். ஆனால், தப்பு செய்பவர்கள் குரல் வித்தியாசமாக இருக்கும். அதனால் இந்த ரோபோட் அதனை எளிதாக கண்டுபிடிக்கும். ஆம், வன்மத்தின் குரலுக்கு என்றுமே வித்தியாசம் உண்டு. அதேபோல் சிக்னல் போன சில நொடிகளில் அங்கு நடக்கும் ஒரு சம்பவம் எங்களுக்கு தெரியவும் வரும். நாங்கள் அதனை கண்காணித்துக்கொண்டே இருப்போம் என்று அவர்கள் கூற, இலட்சியதீரனுக்கு கண்ணீரே வந்துவிட்டது.

நாட்டின் முன்னேற்றத்துக்காக மரண படுக்கையில் படுக்க நான் தயார் என்றான் இலட்சியதீரன்.

அவனை வைத்து அந்த இனிதான தொடக்கம் தொடங்கினாலும், எப்படியோ இவர்கள் திட்டம் வெளியில் கசிந்தது. விளைவு, இலட்சியதீரன் உயிர் பிரிந்து அவன் இதயம் தனித்து போராடியது. ஆம், அந்த இளைஞர்கள் வன்மத்திற்கு பலியாகினார்கள். நம் நாட்டில் தான் நல்லது செய்யவேண்டுமென்று நினைத்தாலே தடுக்க நான்கு பேர் ஆவது வருவார்களே.
இவ்வாறு நடந்த ஒன்றை பற்றி யோசித்துக்கொண்டிருந்த அந்த ஆத்மா புகையாகவே அந்த இடத்தை எரித்து சாம்பலாக்கியது. அவன் இதயம் தீயிற்கு இறையானது.

இலட்சியதீரன், ஒரு நல்ல செயலுக்காக உயிரை இவ்வுலகிற்கு கொடுத்து இலட்சியத்தை அடைய முடியாமல் போனாலும் முயற்சி செய்து ஒரு வீரனாக இறந்து போனான்.

மீண்டும் சந்திப்போம்…

எழுதியவர் : பாலகார்த்திக் பாலசுப்பிர (29-Jan-17, 6:58 pm)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
Tanglish : Vettriyin vilimbil
பார்வை : 694

மேலே