தென்றல்
தென்றல் வீசும் மாலை நேரம்
பூக்கள் சிந்தும் வாசம் எங்கும்
காதலியே என் நெஞ்சம் கொள்ளும் காதல் மயக்கம்
மண்ணைச் சேரும் வேர் போல
தண்ணீர் சேரும் மீன் போல
உன்னைச் சேர என்றும் எந்தன் உயிர் துடிக்கும்
அன்பே காதல் மயக்கம்
உயிரின் ஆழம் வரைக்கும்
என்றென்றும் இன்பம் இருக்கும்
இது ஜீவன் தேடும் ஜீவன் கொள்ளும் தீரா நெருக்கம்
இங்கு வானம் உள்ள காலம் மட்டும் காதல் இருக்கும்
முதல் மயக்கம் ஆஹா தனி மயக்கம்
இது ஒரு முறை தான் உயிர் விடும் வரைதான்
அழிவதில்லை அது அழிவதில்லை உண்மைக் காதல் என்றும் அழிவதில்லை
தேடினேன் உன்னைத் தேடினேன்
காதலில் மனம் வாடினேன்
லைலா மஜ்னு போலே இங்கு உண்மை காதல் உண்டா
இவன் நெஞ்சில் கள்ளம் இல்லை
இது உண்மைக் காதல் அம்மா
இது உண்மைக் காதல் அம்மா
ராஜ சுகம் இந்த காதல் சுகம்
இது தேகம் தாண்டி வாழும் சுகம்
மொழிகளில்லை ஓரு வார்த்தை இல்லை இங்கு மௌனம் கூட கதை படிக்கும்
தேகங்கள் இங்கு வண்ணமாய் காதலில் ஓர் ஓவியம்
முள்ளில்லாத ரோஜா நம் கண்கள் கண்டதில்லை
அட கண்ணீர் இல்லா காதல்
அதில் உண்மை என்றும் இல்லை
அதில் உண்மை என்றும் இல்லை