சித்தாந்தக் கண்ணாடிகள்
.
சித்தாந்தக் கண்ணாடிகள்
. *********************
இடது வலதாய்
பிரிந்து நிற்கிறோம்.
எல்லோரின் கண்களிலும்
அவரவர் கண்ணாடிகளோடு..
எங்களின் நியாயங்களும்
தர்மங்களும்
உங்களின் கண்ணாடிகளிலும்,
உங்களுடையன
எங்கள் கண்ணாடிகளின்
ஊடாகவும்
அநியாயங்களாகவும்
அதர்மங்களாவுமே
காட்சி தருகின்றன.
எப்போதுதான்
இரு தரப்புமே
கண்ணாடிகளைக்
கழற்றி எறிந்துவிட்டு
கண்களால் மதிப்பீடு
செய்யப்போகிறோம்..?
- ஆ.மகராஜன், திருச்சி.