என் ஏறு தழுவ

குருதி குடித்து கொன்று தின்னும்
கோபம் சுழலவில்லை

வந்து இருந்து சென்ற மங்கையிடம்
மட இச்சை செய்ய எவருமில்லை

அறம் அறியா கட்சிகளின் நிறக்கொடியுடன்
கை ஏதும் ஓங்கவில்லை

கால் ஆடி கை நடுங்கி மது வீச்சம்
கொண்ட வாய் உலறல் ஏதுமில்லை

இருந்தும் காவலின் ஏவல்கள் கைதடியால் இரத்தம் பார்க்க தயங்கவில்லை

எழுதியவர் : பிரபாகரன் (30-Jan-17, 11:33 am)
சேர்த்தது : பிரபாகரன்
Tanglish : en yeru thazhuva
பார்வை : 235

மேலே