உன்னிடம் நான்
உன்னிடம் என்ன
கேட்டேன்..
அன்பே..!
காலையில் காபி
கொடுத்தால்
கொஞ்சம் நிமிர்ந்து
என்னை பார்..!
நான் உன்னிடம்
வேண்டுவது நன்றியல்ல
அன்புதான்...!
ஆசை ஆசையாய்
சமைத்து பரிமாறுகையில்
குறைகளே சொல்லி
தட்டி விடுகிறாய்..!
நான் உன்னிடம்
வேண்டுவது பாராட்டல்ல..
ஓரே அடியாக
வார்த்தை அம்புகள்
துளைக்காமல் இருக்கலாமே....!
உனக்கே உனக்காக
வாழும் எனக்கு
ஆடம்பர வாழ்வு
வேண்டாம்..!
அன்பு ஒன்று
மட்டுமே வேண்டும்..!
உன்னோடு வாழ
வந்து..
நட்புகள் எல்லாம்
தொலைத்தேன்...
உனக்கு பிடிக்கவில்லையென்று..
என் சுமைகளை
உன்னிடம் கொட்டிட
ஆசைப்படுகிறேன்..!
நீயோ அலட்சிப்படுத்தி
விட்டுச்செல்கிறாய்..
வேலேயே செய்து
உட்கார்ந்தால் எங்கிருந்து
வருகிறது...அப்படியொரு
கோபமுனக்கு...
உன்னிடம் நான்
என்ன கேட்பேன்..
அன்பு ..
அன்பு..
வேறொன்றுமல்ல....!