உனக்குள் நான், எனக்குள் நீ,

நான் யார்?
நீ யார்??

நானென்றால் யார்??
நீயென்றால் யார்???

உடலா நீ???
பெயரா நீ???
நினைப்பா நீ???
கற்பனையா நீ???
கானல்நீரா நீ???

பதில் சொல்லடா...

நீ யார்???

நீ என்றால் யார்???

நீ என்றால் என் சொந்தபந்தமா???
நீ என்றால் என்னை காக்கும் இயற்கையா???
நீ யார்???

பதில் சொல்லடா...

நீ யார்???..

உன்னால் என்னை வரையறுக்க இயலுமா???
அல்லது என்னால் உன்னை வரையறுக்க இயலுமா???

நீ யாரென நீயே சொல்லடா...
நான் யாரென நானே அறியவில்லையடா...

நான் யார்???
நான் யார்???

எதற்காக இப்படி பைத்தியமாகப் புலம்பிக் கொண்டிருக்கிறேன்???
நானென்றால் யார்???

நானென்றால் மொழியா???
நானென்றால் சமுதாயமா???
நானென்றால் மக்களா???
நானென்றால் அரசனா???
நானென்றால் சுவாசக்காற்றா???

நான் யாரென்று சொல்லடா...
நான் யார்???...

நானென்றால் ஊரா???
நானென்றால் பணமா???
நானென்றால் துருப்பிடித்தத் தகரமா???
நானென்றால் யார்???

செயலால் நான் யார்???
பழக்கவழக்கத்தால் நான் யார்???

நான் யார்???
கொள்ளைக்காரனா??
கொலைகாரனா???
மகாபாதகம் புரிந்தவனா???

நான் யார்???
நீ யார்???

நானும் நீயும் ஒன்றா???
அல்லது வெவ்வேறா???

பதில் சொல்லடா...

நீ நீதான்...
நான் நான் தான்...
நீ நானாகவோ நான் நீயாகவோ என்றும் மாற முடியாது...
ஆனால், உனக்குள் நானும்,
எனக்குள் நீயும் வாழ்கிறோம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Jan-17, 8:07 pm)
பார்வை : 971

மேலே